Sunday, December 5, 2010

தப்புமா கொச்சி அணி *இன்று முக்கிய முடிவு


கொச்சி ஐ.பி.எல்., அணியின் தலைவிதி இன்று நிர்ணயிக்கப்பட உள்ளது. இன்று மும்பையில் நடக்க உள்ள ஐ.பி.எல்., ஆட்சிக் குழு கூட்டத்தில் இது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. 
கடந்த மார்ச் மாதம் நடந்த ஐ.பி.எல்., அணிகள் ஏலத்தில் புனே (ரூ.1702 கோடி) மற்றும் கொச்சி (ரூ. 1533 கோடி) அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டன. இந்த இரு அணிகளும் அடுத்த ஆண்டு நடக்க உள்ள 4 வது ஐ.பி.எல்., தொடரில் புதிதாக பங்கேற்க விருந்தன. இந்நிலையில் கொச்சி அணி, பங்குதாரர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து இப்பிரச்øனையை முடிக்க, ஐ.பி.எல்., நிர்வாகம் காலக்கெடு கொடுத்திருந்தது. 
சுமூக முடிவு:
கொச்சி அணியின் பங்குகளில், ஆங்கர் எர்த், பரினி டெவலபர்ஸ், ரோசி புளூ மற்றும் பிலிப் வேவ் ஆகியவற்றுக்கு 74 சதவீத பங்குகள் உள்ளன. மீதி உள்ள 26 சதவீத பங்குகள் ரெண்டஸ்வாஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டு நிறுவனத்திடம் இருந்தது. ஏலத்தின் போது இந்நிறுவனம் வெற்றிக்கு உதவியதன் காரணமாக, இப்பங்குகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதனால் மற்ற பங்குதாரர்களுக்கு, இதில் உடன்பாடு ஏற்பட வில்லை. இதனால் பங்குகளை விற்கப் போவதாக அறிவித்தனர். இதனால் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், 10 சதவீத பங்குகளை மட்டும் வைத்துக் கொள்வதாக ரெண்டஸ்வாஸ் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது. இது ஐ.பி.எல்., நிர்வாகத்திடமும் தெரிவிக்கப்பட்டது. இதனால் இன்று நடக்க உள்ள ஆட்சிக் குழு கூட்டத்தில் கொச்சி அணிக்கு எந்த சிக்கலும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment