Saturday, July 28, 2012

இந்தியா வெற்றி * காம்பிர் அசத்தல் சதம் *


:இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் அசத்திய கவுதம் காம்பிர் சதம் அடித்து கைகொடுத்தார். சொந்த மண்ணில் பவுலிங்கில் சொதப்பிய இலங்கை அணி தோல்வி அடைந்தது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது ஒருநாள் போட்டி, நேற்று

Tuesday, July 24, 2012

சுருண்டது இந்திய அணி * இலங்கை முதல் வெற்றி


இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 138 ரன்னுக்கு "ஆல் அவுட்' ஆனது. இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, 1-0 என முன்னிலையில் உள்ளது. 
இரு அணிகள் இடையிலான இரண்டாவது போட்டி, அம்பாந்தோட்டை மைதானத்தில் நடக்கிறது. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார். இந்திய அணியின் துவக்க வீரர் சேவக் (15), இம்முறை நிலைக்கவில்லை. 
அடுத்து வந்த விராத் கோஹ்லி (1), ரெய்னா (1) ஏமாற்றினர். ரோகித் சர்மா "டக்' அவுட்டானார். தோனியும் (11) கைவிட்டார். இர்பான் 6, அஷ்வின் 21 ரன்கள் எடுத்தனர். கடைசி வரை போராடிய காம்பிர், 65 ரன்னில் அவுட்டாக, இந்திய அணி 33.3 ஓவரில் 138 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை சார்பில் பெரேரா, மாத்யூஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 
எளிய இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு தில்ஷன் (50), தரங்கா (59) கைகொடுக்க, 19.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

Monday, July 23, 2012

விராத் விளாசல் தொடருமா?


 இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. முதல் போட்டியில் சதம் விளாசிய விராத் கோஹ்லி, மீண்டும் அசத்தும்பட்சத்தில், இந்திய அணியின் வெற்றிநடை தொடரலாம்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில்

Saturday, July 21, 2012

இந்தியா வெற்றி


இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் ஜொலித்த விராத் கோஹ்லி சதம் அடித்து அசத்தினார். சங்ககராவின் போராட்டம் வீணானது. 
இலங்கை சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி, அம்பாந்தோட்டையில் நேற்று நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார். 
சேவக் அபாரம்:
நீண்ட ஓய்வுக்குப் பின் களமிறங்கிய இந்திய அணிக்கு, துவக்க வீரர் காம்பிர், 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். சேவக்குடன் விராத் கோஹ்லி இணைந்தார். இவர்கள் ஒன்றும், இரண்டுமாக சேர்த்து, அணியின் ஸ்கோரை

Monday, December 6, 2010

பீட்டர்சன் இரட்டைசதம் (213*); இங்கிலாந்து 551/4





இரட்டை சதமடித்த மகிழ்ச்சியில் பீட்டர்சன்.
அடிலெய்டு, டிச.5:  ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 551 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
வெள்ளிக்கிழமை துவங்கிய இரண்டாவது டெஸ்டின் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் ஆடத்தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்திருந்தது. குக் 136 ரன்களுடனும், பீட்டர்சன் 85 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ûஸ தொடர்ந்தது. குக் 148 ரன்கள் சேர்த்த நிலையில் ஹாரிஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 18 பவுண்டரிகள் அடங்கும். ÷
குக் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து காலிங்வுட் களம்புகுந்தார். மறுமுனையில் பீட்டர்சன் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 158 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் சதமடித்தார்.
இங்கிலாந்து வீரர்களை விரைவாக ஆட்டமிழக்கச் செய்யும் முயற்சியில் பாண்டிங் தொடர்ந்து ஈடுபட்டார். அவர் பௌலர்களை அவ்வப்போது மாற்றிக்கொண்டேயிருந்தார். இருப்பினும் அவருடைய முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
பீட்டர்சன்-காலிங்வுட் ஜோடி விரைவாகவும், அதேசமயம் விக்கெட் விழாமலும் ரன் குவிப்பில் ஈடுபட்டது. அணியின் ஸ்கோர் 452 ரன்களை எட்டியபோது காலிங்வுட், வாட்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 70 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்தார்.
பின்னர் இயன்பெல் பீட்டர்சனுடன் ஜோடி சேர்ந்தார். பீட்டர்சன் விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். 133-வது ஓவரில் பீட்டர்சன் இரட்டை சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் பீட்டர்சன் அடித்த இரண்டாவது இரட்டைச்சதம் இதுவாகும். பீட்டர்சனின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோரும் 500 ரன்களை கடந்தது.
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 551 ரன்கள் எடுத்துள்ளது. பீட்டர்சன் 213 ரன்களுடனும், இயான் பெல் 41 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
கடந்த டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய சிடிலுக்கு இந்தப் போட்டியில் ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. அவர் 26 ஓவர்களை வீசி 100 ரன்களை வாரி இறைத்தார். இதேபோல் பொலிங்கர் 27 ஓவர்களில் 121 ரன்களையும், டோஹெர்ட்டி 24 ஓவர்களில் 120 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர்.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை விட 306 ரன்கள் கூடுதலாகப் பெற்றுள்ளது. மேலும் 100 ரன்கள் சேர்த்துவிட்டு இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4-வது நாள் ஆட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இரண்டு நாள் ஆட்டமே மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலியா வெற்றிபெற முடியாது என்பது உறுதியாகிவிட்டது. அதேசமயம் ஆஸ்திரேலிய அணி தோல்வியையோ அல்லது இன்னிங்ஸ் தோல்வியையோ தவிர்க்க கடுமையாகப் போராடும். இருப்பினும் இங்கிலாந்து பௌலர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலை அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சுருக்கமான ஸ்கோர்
முதல் இன்னிங்ஸ்: ஆஸ்திரேலியா- 245 (ஹசி 93, ஹாடின் 56, வாட்சன் 51, ஆண்டர்சன் 4வி/51), இங்கிலாந்து -551/4 (பீட்டர்சன் 213*, குக் 148, டிராட் 78, காலிங்வுட் 42, இயான் பெல் 41*, ஹாரிஸ் 2வி/84).
(dinamani)

Sunday, December 5, 2010

தப்புமா கொச்சி அணி *இன்று முக்கிய முடிவு


கொச்சி ஐ.பி.எல்., அணியின் தலைவிதி இன்று நிர்ணயிக்கப்பட உள்ளது. இன்று மும்பையில் நடக்க உள்ள ஐ.பி.எல்., ஆட்சிக் குழு கூட்டத்தில் இது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. 
கடந்த மார்ச் மாதம் நடந்த ஐ.பி.எல்., அணிகள் ஏலத்தில் புனே (ரூ.1702 கோடி) மற்றும் கொச்சி (ரூ. 1533 கோடி) அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டன. இந்த இரு அணிகளும் அடுத்த ஆண்டு நடக்க உள்ள 4 வது ஐ.பி.எல்., தொடரில் புதிதாக பங்கேற்க விருந்தன. இந்நிலையில் கொச்சி அணி, பங்குதாரர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து இப்பிரச்øனையை முடிக்க, ஐ.பி.எல்., நிர்வாகம் காலக்கெடு கொடுத்திருந்தது. 
சுமூக முடிவு:
கொச்சி அணியின் பங்குகளில், ஆங்கர் எர்த், பரினி டெவலபர்ஸ், ரோசி புளூ மற்றும் பிலிப் வேவ் ஆகியவற்றுக்கு 74 சதவீத பங்குகள் உள்ளன. மீதி உள்ள 26 சதவீத பங்குகள் ரெண்டஸ்வாஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டு நிறுவனத்திடம் இருந்தது. ஏலத்தின் போது இந்நிறுவனம் வெற்றிக்கு உதவியதன் காரணமாக, இப்பங்குகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதனால் மற்ற பங்குதாரர்களுக்கு, இதில் உடன்பாடு ஏற்பட வில்லை. இதனால் பங்குகளை விற்கப் போவதாக அறிவித்தனர். இதனால் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், 10 சதவீத பங்குகளை மட்டும் வைத்துக் கொள்வதாக ரெண்டஸ்வாஸ் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது. இது ஐ.பி.எல்., நிர்வாகத்திடமும் தெரிவிக்கப்பட்டது. இதனால் இன்று நடக்க உள்ள ஆட்சிக் குழு கூட்டத்தில் கொச்சி அணிக்கு எந்த சிக்கலும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்ச்சியான கிரிக்கெட் வீரர் தோனி: முஷாரப்


 "" உலகின் கவர்ச்சியான கிரிக்கெட் வீரர், இந்திய கேப்டன் தோனி,'' என வர்ணித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப். 
இது குறித்து அவர் கூறியது: உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் இந்தியாவின் சச்சின். அதே சமயம் உலகின் கவர்ச்சிகரமான மற்றும் உற்சாகமான கிரிக்கெட் வீரர் தோனி. ஒரு முறை அவரது நீளமான தலைமுடி குறித்து, அவரை பாராட்டினேன். தற்போது அவர் தலைமுடியை "கட்' செய்து குறைத்துக் கொண்டுள்ளார். ஆனால் தற்போதும் பார்ப்பதற்கு கவர்ச்சியாகவே உள்ளார். இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சி, ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நிலைமை, மனவேதனை அளிப்பதாக உள்ளது. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்னைகள், பாகிஸ்தான் கிரிக்கெட்டை ஆட்டிப் படைத்து வருகின்றன. இதிலிருந்து விரைவில் மீள வேண்டும். இவ்வாறு முஷாரப் தெரிவித்தார்.